இந்தியாவில் மின்சார ரயில் தடம் புரண்டு நடைமேடையில் ஏறியதால் பரபரப்பு!

இந்திய மாநிலம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு நடைமேடையில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம், சாகுர் பாஸ்தி ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் ஒன்று நேற்று இரவு 10.49 மணிக்கு மதுரா ரயில் நிலையத்துக்கு சென்றது. அப்போது, அங்கு ரயிலின் எஞ்சின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் இருந்து நடைமேடை மீது ஏறியது.
இதனால், நடைமேடையில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்து ஓடினர். மேலும், ரயிலில் இருந்த பயணிகள் பதறிப்போய் வேகமாய் இறங்கினர். இதனால், மதுரா ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலிருந்து வந்த ரயில்வே ஆதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், ரயில் எஞ்சின் தடம் புரண்டது பற்றி காரணம் ஏதும் தெரியவில்லை. பின்பு, நடைமேடையில் இருந்து எஞ்சினை அகற்றும் பணி நடைபெற்றது.
இந்த விபத்து தொடர்பாக மதுரா ரயில் நிலையத்தின் இயக்குநர் ஸ்ரீவத்சவா கூறுகையில், “பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.