விஜய் தொடர்பில் அவதூறு பரப்பிய BJP பெண் பிரமுகர் கைது

விஜய் தொடர்பில் அவதூறு பரப்பிய BJP பெண் பிரமுகர் கைது என்ற பிரச்சனை சமூகவலை தளங்களில் பரவி வருகிறது. இந்த பெண் பிரமுகர் யார் என்பது ரசிகர்களால் அதிகம் தேடப்பட்டு வரும் வரும் நிலையில் வழமைக்கு வம்பில் சிக்கும் சீமாட்டி தான் இவர் என்பது தெரிய வருகிறது.
இவர் வேறு யாரும் இல்லை கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்கி (56). பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஆவார் .

இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி அவதூறு தகவல்களை முதலிலும் பரப்பி பேசப்பட்டவர்.
அந்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டுவராத நிலையில் தற்போது அடுத்த பஞ்சாயத்துக்கு மூக்கை நுழைத்துள்ளார் அம்மணி உமா கார்கி .
கோவை மாநகர சைபர் கிரைம் பொலிசில் தி.மு.க. பிரமுகர் ஹரீஷ் என்பவர் புகார் கொடுத்து
அதன்பேரில் அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் பொலிசில் வழக்குப்பதிவு கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்கி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் தொடர்பில் அவதூறு பரப்பி

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிசில் உமா கார்கியை கைது செய்தனர்.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்கி தற்போது சென்னை அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.