இந்தியா

இந்தியாவில் பந்தயத்தால் 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து; 36 பேர் பரிதாபமாக மரணம்

இந்தியாவின் ஜம்மு & காஷ்மீரில் தோடாவின் அசார் பகுதியில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் தோடாவில் உள்ள படோடே- கிஷ்ட்வார் தேசிய நெடுஞ்சாலையில் துருங்கல்- அசார் பகுதி அருகே உள்ள 300 அடி பள்ளத்தாக்கில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. காயங்களுடன் மீட்கப்பட்ட 19 பேர் கிஷ்த்வார் மற்றும் ஜிஎம்சி தோடா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து குறித்து தகவலிருந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர். மூன்று பேருந்துகள் ஒன்றாக இயங்கியதாகவும், ஒன்றையொன்று முந்திச் செல்லும் பந்தயத்தில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பேருந்து விபத்து வேதனை அளிக்கிறது. உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டும். இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Back to top button