இலங்கை

நாட்டில் அரிசி, மரக்கறி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்

எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளது. அமைச்சரவையில் கலந்துரையாடி விலையை குறைப்பதற்கு தனியான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 500,000 பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுக்காக நாட்டிலேயே முதன்முறையாக வலுவூட்டப்பட்ட, ஒரு வீதம் இரும்பு மற்றும் போலிக் அமிலம் சேர்க்கப்பட்ட அரிசி அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள ரமடா ஹோட்டலில் நேற்று இடம்பெற்றுள்ளது.

ஐந்தாம் வகுப்புக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையை தடுக்க இந்த அரிசி வழங்கப்படுகிறது.

ஒரு மாணவருக்கு மதிய உணவுக்காக 75 கிராம் அரிசியும் 500,000 பாடசாலை மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 04 மெற்றிக் டன் அரிசியும் வழங்கப்படும்.

உலக உணவு அமைப்பின் அனுசரணையில் விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

Back to top button