இந்தியா
டெல்லியில் பெரும் பரபரப்பு

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த ஒருவர் தாஜ்மஹாலை சுற்றி பார்ப்பதற்காக இந்தியா வந்துள்ளார். அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த பயணி மாயமாகிவிட்டார். இதனால் மாயமான பயணியை டெல்லி சுகாதாரத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.