இந்தியா

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்து வரும் 6 மணி நேரத்திற்குள் வலுப்பெறும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பில் கூறியிருந்தது.

மேலும், 16 -ம் திகதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 17 -ம் திகதி வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும் கூறியிருந்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதி அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (நவ.16) வலுவடைய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Back to top button