ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா தம்பதியினர் குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளனர் தெரியுமா?

ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா தம்பதி புதிதாக பிறந்துள்ள தங்களுடைய பெண் குழந்தையின் பெயரை வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் முன்னணி பணக்காரர் மற்றும் முக்கிய தொழிலதிபரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் தம்பதிகளின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும்(Akash Ambani), இந்தியாவின் வைர வியாபாரியான ரசல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தா-க்கும்(Shloka Mehta) கடந்த 2019ம் ஆண்டு மார்ச் திருமணம் நடைபெற்றது.

அத்துடன், பள்ளி படிப்பு தொடங்கி ஒன்றாக பயணித்து வந்த இந்த தம்பதிக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரித்வி ஆகாஷ் அம்பானி என்ற முதல் ஆண் குழந்தை பிறந்தது. akash-ambani-and-shloka-mehta இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற நீதா முகேஷ் அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழாவின் போது ஷ்லோகா மேத்தா தன்னுடைய இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்து இருந்தார். இந்நிலையில் கடந்த மே 31ம் திகதி ஷ்லோகா மேத்தா- ஆகாஷ் அம்பானி தம்பதி தங்களுடைய இரண்டாவது குழந்தையை உலகிற்கு வரவேற்றனர். மேலும் தற்போது தங்களுக்கு புதிதாக பிறந்துள்ள இரண்டாவது பெண் குழந்தைக்கு “வேதா ஆகாஷ் அம்பானி”(Veda Akash Ambani) என பெயர் சூட்டி இருப்பதாகவும் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடவுள் கிருஷ்ணரின் அருளோடும், திருபாய் மற்றும் கோகிலாபென் அம்பானியின் ஆசீர்வாதத்துடனும், தன்னுடைய இளைய சகோதரி வேதா ஆகாஷ் அம்பானி பிறந்ததை பிரித்வி ஆகாஷ் அம்பானி(Prithvi Akash Ambani ) அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதா என்பது சமஸ்கிருதத்தில் உள்ள பெண் பெயர் ஆகும், வேதா என்பது அறிவு மற்றும் ஞானம் என்பது குறிப்பிடத்தக்கது.