உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஆளும் கூட்டணியின் இரு பிரதான பங்காளிகளும் தீர்மானித்துள்ளன.
இலங்கையில் ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியும், இலங்கை பொதுஜன பெரமுனாவும் கூட்டணி அமைத்து நடைபெறவுள்ள உள்ளுராட்ச்சிமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளன.
இரு தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் , சில உள்ளுராட்ச்சி சபைகளுக்கு யானை சின்னத்திலும், சில சபைகளுக்கு மொட்டு சின்னத்திலும் ஏனைய பகுதிகளில் பொது சின்னத்தின் கீழும் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொது சின்னம் என்னவென்பது தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.