இந்தியா

நீதிமன்றில் செந்தில் பாலாஜிக்கு சாதகமான தீர்ப்பு- அதிருப்தியில் தமிழக பாஜக

காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்றம் செய்தது தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறையினர் செயல் அதிருப்தி அளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், அங்கு அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இன்று அவருக்கு இதய அறுவைசிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இதேவேளை, செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தலாம் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார். 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கலாம் என சில கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தார். இதற்கிடையே சிகிச்சையில் இருந்ததால் அமலாக்கத்துறை விசாரிப்பதில் சிக்கல்கள் எழுந்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு உயர்நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தனர். இத்துடன் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு வெளியே அழைத்து செல்லாமல் விசாரணை நடத்துவது சாத்தியமில்லாத ஒன்றாகும், இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், மருத்துவமனையில் ஒருவர் இருக்கும் போது காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா? உடல்நிலை சரியில்லை என மருத்துவ அறிக்கை அளித்த பின்னரும் காவலில் எடுக்க கோருகிறீர்களா? என கேள்வி எழுப்பினர்.

Back to top button