இந்தியா

தமிழகத்தில் தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட வெள்ளம்; 20 பேர் பலி

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை வரை 20 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. மழை வெள்ளத்தில் மூழ்கி 16 பேரும் சுவர் இடிந்து விழுந்து 2 பேரும் மின்சாரம் தாக்கி 2 பேரும் உயிரிழந்துள்ளனர். 20 பேரின் உடல்களும் முதலில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ளதால் அங்கு மின்சாரம் துண்டிக்கபப்ட்டுள்ளது.

இந்நிலையில் ஜெனரேட்டர் மூலம் அத்தியாவசிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்சாரம் இல்லாததால் பிணவறையில் உடல்களை பாதுகாப்பாக வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதனால் உடல்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட இலவச அமரர் ஊர்திகள் மூலம் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதேவேளை தூத்துக்குடியில் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் கூறியது: “மத்திய ஆய்வு குழுவினர் தூத்துக்குடிஇ ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் காயல்பட்டினம் பகுதிகளை ஆய்வு செய்கின்றனர். ஆய்வின்படி இழப்பீடுகள் வழங்கப்படும் என்றும் , தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சேதாரம் இருக்கும் என்றும் தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது .

Back to top button