கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணம்! 51 ஆண்டுகளாக ஒரே தொகுதியில் வெற்றி
இந்தியாவில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி(வயது 79) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி, கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் இருந்து 1970ம் ஆண்டு எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அன்று முதல் 11 தேர்தல்களில் தோல்வியே சந்திக்காமல் 51 ஆண்டுகளாக ஒரே தொகுதியில் வெற்றி பெற்ற புகழுக்கு உரியவர்.
இந்நிலையில் அக்கால கட்டங்களில், நான்கு முறை மாநில அமைச்சராகவும், 2006 – 2011-ல் ஒரு முறை எதிர்க்கட்சித்தலைவராகவும் பணியாற்றினார். 2004 முதல் 2006 வரை மற்றும் 2011 முதல் 2016 வரை இரண்டு முறை கேரளாவின் முதலமைச்சராக இருந்தவர். கேரள சட்டமன்றத்தில் அதிக காலம் பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் உம்மன் சாண்டி. இந்நிலையில் உடல்நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரின் உடல் கேரளா கொண்டுச் செல்லப்பட்டு, அங்கு இறுதி சடங்குகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.