இந்தியா
சட்டசபை உரையில் “திராவிட மொடல்” என்ற தொடரை தவிர்த்த ஆளுநர் – சபையில் சலசலப்பு
தமிழ் நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தனது உரையின்போது திராவிட மொடல் ஆட்சி என்ற தொடரை தவிர்த்துள்ளார் இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது,
ஆளுநரின் உரையில் ‘வளர்ச்சியுடன் கூடிய திராவிட மொடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்’ என்ற வாக்கியம் மற்றும் 2 மற்றும் 3 பக்கத்தில் இருந்த திராவிட மொடல் என்ற வார்த்தையையும் பேசாமல் தவிர்த்துள்ளார்.
இதேபோல் 46ம் பக்கத்தில் இருந்த ‘சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது’ என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்துள்ளார்.
இது அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது . இதேவேளை சட்டசபையில் இன்று ஆளுநர் உரையாற்ற தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள், ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.