இந்தியா

கழுத்தை அறுத்தாலும் போகமாட்டேன்… ராகுல் காந்தியின் அதிரடி பதில்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .இதன்போது பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரது உறவினரும் பாஜக எம்பியுமான வருண் காந்தியை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ராகுல் காந்தி கூறியதாவது:- அவர்களின் சித்தாந்தங்கள் எங்களுடன் ஒத்துப்போகாது. வருண் காந்தி எனது பாத யாத்திரையில் பங்கேற்றால் அவர் சிக்கலை சந்திக்க நேரிடும்.

பாஜக அதை ஏற்காமல் போகலாம். என்னால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு போக முடியாது. என் கழுத்தை அறுத்தாலும் அங்கு நான் போக மாட்டேன். எனது குடும்பத்திற்கு என ஒரு சித்தாந்தம் உள்ளது, அதற்கு ஒரு சிந்தனை அமைப்பு உள்ளது.

நான் அவரை அன்புடன் சந்திக்க முடியும், அவரை கட்டிப்பிடிக்க முடியும். ஆனால் அந்த சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கு சாத்தியம் இல்லை. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள், மத்திய நிறுவனங்களை கட்டுப்படுத்துகின்றன. தேர்தல் ஆணையம், நீதித்துறை மீது அழுத்தம் கொடுக்கிறது. அனைத்து நிறுவனங்களுக்கும் அழுத்தம் உள்ளது. என அவர் கூறினார்.

Back to top button