இந்தியா

இந்தியப் பல்கலைக்கழகமொன்றில் சக மாணவன் கொடுத்த பரிசை ஏற்க மாணவி மறுத்ததால் நிகழ்ந்த பயங்கரம்

இந்தியாவில் பல்கலைக்கழகம் ஒன்றில், தன் சக மாணவன் கொடுத்த பரிசை ஏற்க மறுத்த மாணவி சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிரேட்டர் நொய்டாவிலுள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில், மூன்றாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் அனுஜ் (Anuj) மற்றும் சிநேகா (Sneha Chaurasia). இருவருக்கும் 21 வயதுதான் ஆகிறது. நேற்று, மதியம் 1.30 மணியளவில், ஹாஸ்டலில் தங்கியிருக்கும் அனுஜ், சிநேகாவை சந்தித்துள்ளார். இருவரும் பேசிக்கொள்ளும் மற்றும் கட்டியணைத்துக்கொள்ளும் காட்சிகள் அங்குள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.

மேலும், அனுஜ் ஏதோ பரிசுப்பொருள் ஒன்றை சிநேகாவுக்குக் கொடுக்க, அதை ஏற்க மறுத்துள்ளார் சிநேகா. அப்போது, மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி ஒன்றை எடுத்து சிநேகாவை சுட்டுள்ளார் அனுஜ். குண்டடி பட்டநிலையிலும் சிநேகா அனுஜைத் திருப்பித் தாக்க, அனுஜ் மீண்டும் சுட, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிநேகா வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில், சிநேகாவை சுட்ட அனுஜ், உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். தன் அறைக்குச் சென்ற அவர், துப்பாக்கியால் தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிநேகாவும் அனுஜும் நீண்ட நாட்களாக பழகிவந்ததாகவும், சமீபத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் இரண்டு குடும்பங்களிலும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Back to top button