இலங்கை

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்

பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாயை 115 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன், நிதியமைச்சின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் அடுத்தவாரமளவில் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றித்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளகவும், இதேவேளை, 100,000 பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு தற்போது வழங்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button