உலகச் செய்திகள்

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வீதியில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (27.1.2024) காலை 5.19 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவில் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களின் விவரம் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக துருக்கியில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button