இலங்கை

கிளிநொச்சியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஒருவர் சிக்கினார்….இருவர் தப்பியோட்டம்

கிளிநொச்சியில் யுத்திய நடவடிக்கையின் போது நேற்று வெள்ளிக்கிழமை (26) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் லொறியொன்றில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஒருவர் சிக்கியதுடன் இருவர் தப்பியோடியுள்ளதாகவும்ஜ் தெரிவிக்கப்படுகின்றது. லொறியொன்றில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தப்பியோடியுள்ளனர்.

வாகனத்தை சோதனையிட்ட போது சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 4 கிலோ எடை கொண்ட இரு கஞ்சா பொதிகளை பொலிஸார் கைப்பற்றினர். கஞ்சா பொதியையும், கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும், கைதான சந்தேகநபரையும் மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் . மேலும் தப்பி சென்ற இரு சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

Back to top button