அமலாக்கத்துறை விவாதம் சூடு பிடித்த போது உச்சநீதிமன்றத்தை நாடிய காரணம் இதுதானா?
சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அமலாக்கத்துறையினர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று நடந்து வருகிறது. இதற்கு முன்பாக நடந்த விசாரணையில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இன்று விசாரணை தொடங்கிய போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜரானார். வாதாடும் போது, குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே அமலாக்க பிரிவுக்கு கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே ஒருவரை கைது செய்ய முடியாது. செந்தில் பாலாஜி குற்றச்சாட்டின் மூலம் பெற்ற பணத்தை மறைத்து தை்திருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிட்டார்.
மேலும் அமலாக்கத்துறை விசாரணை மட்டுமே நடத்த முடியுமே தவிர புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். இப்படி பரபரப்பான விவாதம் நட்ந்து கொண்டிருந்த வேளையில், டெல்லி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது அமலாக்கத்துறை. கடந்த 7ம் தேதி வழங்கப்பட்ட தீர்பை மேற்கோள் காட்டி, மனுவை தாக்கல் செய்துள்ளதாம், செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தாலோ, .இடையீட்டு மனு தாக்கல் செய்தாலோ தங்களது உத்தரவு இ்ல்ல்ாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்ககூடாது எனவும் தெரிவித்துள்ளது.