இந்தியா
தொடரும் வெடிப்புக்களால் ஜோஷிமத் நகரம் பேரிடர் பகுதியாக பிரகடனம்!
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் நகர் பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவும், நிலவெடிப்பும் ஏற்பட்டு வரும் நிலையில், அப்பகுதி பேரிடர் ஏற்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜோஷிமத் நகரத்தில் 603 கட்டிடங்களில் தொடந்து வெடிப்பு ஏற்பட்டு வருவதாகவும், அப்பகுதிகளில் வாழும் மக்கள் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றி தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமயமலையின் அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் இறுதியில் ஜோஷிமத் நகரின் பல்வேறு வீடுகள், வணிக நிறுவன கட்டிடங்களில் மிகப்பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. இந்த விடையம் தொடர்பாக இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி பொதுமக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.