காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த நரேந்திரமோடி
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்த சேவை வர்த்தகத்தை மேம்படுத்தும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால பிணைப்பை வலுப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையை காணொளி மூலம் கொடியசைத்து ஆரம்பித்து வைத்த நிகழ்வின் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்;டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பங்காளித்துவத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை கூட்டாக ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
இணைப்பு என்பது இந்த கூட்டாண்மையின் மையக் கருப்பொருள்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார் மகாகவி சுப்பிரமணிய பாரதி தனது ‘சிந்து நதி’ என்ற பாடலில் இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கப்பல் சேவை அந்த வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளை உயிர்ப்பிக்கிறது,’ என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் இணைப்புக்கான இரண்டு நாடுகளின் பார்வை போக்குவரத்து துறைக்கு அப்பாற்பட்டது.
இந்தியாவும் இலங்கையும் ஃபின்டெக் மற்றும் எரிசக்தி போன்ற பரந்த அளவிலான துறைகளில் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன என்றும் மோடி கூறியுள்ளார்.