மத்திய அரசு லேப்டாப், கணணி இறக்குமதி தொடர்பில் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்
இலவசமாக வெளிநாடுகளில் இருந்து லேப்டாப், கணணி மற்றும் டேப்லட் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய புதிய கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது இந்திய அரசு. இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விதிக்குள் ஹெச்.எஸ்.என் 8741 என்ற வகைக்குள் வரும் லேப்டாப்கள், ஆல்-இன் ஒன் கம்யூட்டர்கள் மற்றும் டேப்லட்கள் உட்பட 20 எலக்ட்ரானிக் பொருட்கள் அடங்கும் என இந்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உடனடியாக அமலுக்கு வரவுள்ளதாகவும், முறையான லைசென்ஸ் பெற்று இறக்குமதி செய்பவர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவு எடையுடன் கொண்டுவர தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிப்பயன்பாட்டிற்காக வாங்குவதற்கும், இணையதளம் வாயிலாக வாங்குவதற்கும் தடையில்லை என்றும் அதேசமயம் இறக்குமதி வரி கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.