இந்தியா

பிரதமர் மோடி சர்வ மத பிராத்தனைக்கு பிறகு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்!

பிரதமர் மோடி இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இன்று திறந்து வைத்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு புதிய இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையின் கீழ் சுமார் 970 கோடி ரூபாய் செலவில் இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. காலை 7.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகே சர்வ மத பிராத்தனைகளுடன் திறப்பு விழா சிறப்பாக தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை சபாநாயகர் ஹரிவன் நாராயண்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 12 மத போதகர்களின் வழிபாட்டிற்குப் பிறகு, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்து பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் இதனை தொடர்ந்து ஆதீன மடாதிபதிகள் தமிழ் மறைகள் முழங்க பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கப்பட்டது. பின் செங்கோலுடன் தமிழ் ஆதீன மடாதிபதிகளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உள்ள கண்ணாடி பெட்டியில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்.

Back to top button