இந்தியா

சவால் என்ற பெயரில் சாவை தேடிய இளைஞர்கள்

சவால் என்ற பெயரில் திருப்பூரில், நண்பர்களிடம் ஓடும் ரயிலின் முன் நின்று செல்பி எடுத்து ரயில் மோதி உடல் சிதறி இரண்டு இளைஞர்கள் பலியாகினர் .

ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த இவர்கள் திருப்பூர் ரங்கநாதபுரத்தில் தங்கி, அப்பகுதியில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்தனர்.

விடுமுறையென்பதால், இருவரும் உடன் தங்கியிருந்த நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, தாங்கள் இருவரும் ரயில் வரும் போது அதற்கு முன் நின்று செல்பி எடுத்து அனுப்புவதாக சக நண்பர்களிடம் சவால் விட்டு புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகின்றது.

அணைப்பாளையம் பகுதிக்கு மது போதையில் சென்ற இருவரும் தண்டவாளத்தில் நின்று கொண்டு, பின்னால் வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை செல்பி எடுக்க முயன்றனர். அப்போது அதிவேகமாக வந்த நெல்லை – பிலாஸ்பூர் ரயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

செல்பி எடுக்க எவ்வளவோ பொழுது போக்கு இடங்கள் உள்ளன, அதை விடுத்து வேகமாக வரும் ரெயிலுக்கு அருகிலோ, ஆபத்தான அருவியின் பாறையின் விழிம்பிலோ நின்று செல்ஃபி எடுப்பது சாவை தேடிச்செல்வதற்கு ஒப்பாகும் என்று எச்சரிக்கும் நிலையில் , தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்கும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Back to top button