இந்தியா

அயோத்தி ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் – உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்

இந்தியாவின் குடியரசு தினத்தன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக அத்தகவல் தெரிவிக்கின்றது.

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணிக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் 5ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போது, கோயில் கட்டுமானப் பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிர்மாணப்பணிகள் நிறைவுபெறும் எதிர்வரும் டிசம்பர் 21 மற்றும் அடுத்த ஆண்டு மகர சங்கராந்திக்கு இடையில் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். இதன் பிறகு கோயில் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தி ராமர் கோயில் பற்றி சில குறிப்புக்கள்..!

1528 முகலாயப் பேரரசரின் படைத்தளபதி மிர் பாகியால் பாபர் மசூதி கட்டப்பட்டது. பாபர் ஆட்சிக் காலத்தில் ராமர் கோயில் ஒன்று இடிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து பெரிய கலவரம் வெடித்ததாகவும் பதிவுகள் உள்ளன. ராமஜென்ம பூமி,பாபர் மசூதி சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றி சுவர் எழுப்ப பைசாபாத் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபர் தாஸ் மனுச் செய்தார். அதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

1894 இல் இரவு சர்ச்சைக்குரிய இடத்துக்கு வெளியே ராமர்,சீதா சிலைகள் வைக்கப்பட்டன. இதனால் பெரும் பிரச்சினை உருவானதால் அந்த இடம் பூட்டப்பட்டது. இதற்கு இந்து, முஸ்லிம் தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றம் சென்றனர்.

1950 ஆம் ஆண்டு ராமர் சிலையை வழிபட அனுமதி கோரி பைசாபாத் நீதிமன்றத்தில் கோபால் சிம்லா விஷாரத் என்பவர் மனுச் செய்தார். அந்த சிலையை வழிபட அனுமதி கோரி பரமஹம்ச ராமச்சந்திர தாஸும் மனுச் செய்தார். பூஜை செய்ய அனுமதி கிடைத்தாலும் சர்ச்சைக்குரிய மையப்பகுதி பூட்டியே இருந்தது. அதனை தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது

1993 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய இடத்தில் சில ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த மத்திய அரசு அயோத்தியா சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் பல்வேறு கோணங்களை எதிர்த்து இஸ்மாயில் பரூக்கி என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றார்.

1994 ஆம் ஆண்டு இஸ்மாயில் பரூக்கி தாக்கல் செய்த மனுவில் மசூதி, இஸ்லாம் மதத்தின் ஒரு அங்கம் அல்ல என்று தீர்ப்பு அளித்தது. 2003 ஆம் ஆண்டு கையகப்படுத்த நிலத்தில் எந்தவிதமான மதவழிபாடுகளும் நடக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது , 2010 ஆம் ஆண்டு அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை 2:1 என்ற விகிதத்தில் வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, லாம் லல்லா பிரித்து தீர்ப்பளித்தது.

2011ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

2017 ஆம் ஆண்டு அயோத்தி வழக்கில் அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வகாணும்படி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர் ஆலோசனை வழங்கினார்.

2019 ஆம் ஆண்டு அயோத்தியில் கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை அதன் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது.

2019, பிப்26: இந்த வழக்கில் சமாதானம் ஏற்படுத்துவது குறித்து மத்தியஸ்த குழுவை ஏற்படுத்துவது குறித்து மார்ச் 5-ம் திகதி உத்தரவிடுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

2019, நவம் 9: அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட வழங்கவும் உத்தரவிட்டது.

2020,பிப்.5: ராமர் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 15 உறுப்பினர்களஅ கொண்ட அறக்கட்டளையை அறிவித்தார்.

2020, ஆக.5: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு இந்திய பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Back to top button