இந்தியா

அல்றா சவுண்ட் கருவியால் அலறி ஓடும் தெரு நாய்கள்

தெரு நாய்கள் நமது சூழலில் உலவி திரியும் ஒன்று அது மட்டுமல்லாது சில பொழுதுகளில் இந்த நாய்களால் வீதி விபத்து, சிறுவர்கள் பெரியவர் என்று அனைவரும் கடி வேண்டுவது, சில சமயங்களில் ஓடுவது என்று மிகவும் கொடுரமான நிலை உள்ளது.

இவற்றுக்கெல்லாம் தீர்வை இந்தியாவின் கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் படித்து வரும் மாணவன் ஆண்டோ ஜாய் மாணவி பிரார்த்தனா கோஷ் ஆகியோர் தெருநாய்களை துரத்த என்ன செய்யலாம் என ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதன் பலனாக நாயை துரத்தும் கருவி ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.

இதற்காக தங்கள் பள்ளியின் ஆசிரியை ஒருவர் துணையுடன் அவர்கள் 45 நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் கருவி ஒன்றை உருவாக்கினர்.

இந்த கருவியில் இருந்து எழும் அல்ட்ரா சவுண்ட்டை கேட்டால் நாய்கள் தெறித்து ஓடுவதை கண்டுபிடித்தனர். இதையடுத்து நாய்களை விரட்ட அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கினர். இதனை பல இடங்களில் அவர்கள் பயன்படுத்தி பார்த்தனர். அதில் நல்ல பலன் கிடைத்தது.

இந்த கருவியை பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் புத்தக பையில் இணைத்து கொள்ளலாம். நாய் துரத்தும்போது கருவியின் பட்டனை அழுத்தினால் அதில் இருந்து எழும் ஒலி, நாயை விரட்டிவிடும். இந்த கருவியை தேசிய குழந்தைகள் அறிவியல் கண்டுபிடிப்புக்கான கருத்தரங்கில் வெளியிடவுள்ளதுடன் இதன்மூலம் கருவிக்கான காப்புரிமையை பெறவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Back to top button