இந்தியா

இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் திடீர் சுழற்சி: தமிழகத்திற்கு இடி, மழையுடன் ஏற்பட போகும் ஆபத்து

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை வரப்போகிறது.

திடீரென சுழற்சி
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கன்னியாகுமரி கடல் பகுதியில் திடீரென வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள சில இடங்களில் லேசானது மற்றும் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 31 முதல் 32 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 முதல் 25 டிகிரி செல்ஸியஸ் இருக்கக்கூடும்.

Back to top button