இந்தியா

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைப்பு!

காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் திகதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். பின்பு அவர், நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.தற்போது அவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகள் அமர்வில் கைது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும், வரும் ஜூலை 26 ஆம் திகதி வரை சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் விதித்தது.

இதேவேளை, அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. puzhal prision / புழல் சிறை நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Back to top button