இந்தியா

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது செல்லும்.. காவலில் வைக்க அனுமதி! உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்திய தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும் எனவும், அவரை மேலும் 5 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் திகதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டார். பின்பு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகளான ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் விசாரணையை முடித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பு வழங்கினர். உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் , கோபண்ணா அடங்கிய அமர்வு உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளனர். மேலும், அவரை கைது செய்தது சட்டவிரோதம் இல்லை எனவும் கூறியுள்ளது.

குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை இல்லை எனவும், செந்தில் பாலாஜியை கைது செய்த பின்பு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை 5 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்படுவார்.

Back to top button