புதிதாக கட்டப்படும் பாராளுமன்ற கட்டிட படங்களை வெளியிட்ட மத்திய அரசு!

மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசினால் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, புதிய பாராளுமன்ற கட்டிடம்ஒன்றை கட்ட மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடம், மார்ச் மாதம் திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டுமான பணி முழு வேகத்தில் நடந்து வருகிறது.

ராஜபாதை சீரமைப்பு மற்றும் துணை ஜனாதிபதி இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் ஆகிய புதிய கட்டுமானங்கள் அடங்கிய சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய பாராளுமன்றம் கட்டப்ட்டுவருகிறது.
பெப்ரவரி மாதத்துக்குள் முடிவடைந்து விடும். என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பெருமையை பறைசாற்றும் பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் அறை, நூலகம், நிலைக்குழுக்களுக்கான அறைகள், உணவு அருந்தும் பகுதி, விசாலமான வாகன நிறுத்தும் பகுதி ஆகியவை இடம்பெற்று இருக்கும்.
இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.