இந்தியாவில் கேரள மாநிலத்திற்கு விடுக்கப்பட்ட மஞ்சள் எச்சரிக்கை!
இந்தியாவில் கேரள மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மீனவர்கள் கடலிற்கு செல்வதற்கும் வருகிற 21-ந் திகதி வரை தடைவிதிக்கபட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழையானது ஆரம்பமாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது, இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அவர்ளை மீட்டெடுத்து நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். இவ்வாறு இருந்த நிலையில் மழைகள் குறைந்ததும். மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே பல இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கபட்டுள்ளது.
இன்று முதல் 21-ந் திகதி வரை கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 64.5மில்லிமீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் வருகின்ற 21ம் திகதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை வந்திருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.