உலகச் செய்திகள்

தென் கொரிய தலைநகர் சோலில் தொடரும் தீ விபத்து

தென் கொரிய தலைநகர் சோலில் குடிசைப் பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

குலர்யொங் பகுதியில் (20.01.2023) காலை ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் சுமார் அறுபது வீதிகள் கருகியுள்ளன. உயிரிழப்பு மற்றும் காயங்கள் பற்றி உறுதி செய்யப்படவில்லை.

தலைநகரில் இருக்கும் கடைசி சேரிப் பகுதியான இங்கு நெருக்கமாகக் கட்டப்பட்ட தற்காலிக வீடுகள் இருப்பதாக தென் கொரிய ஊடகங்கள் விபரித்துள்ளன. தீயை அணைக்க 900க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் மற்றும் பல ஹெலிகொப்டர்கள் பல மணி நேரம் போராடினர்.

தீ விபத்துக்கு காரணம் உறுதி செய்யப்படாதபோதும் இங்குள்ள பல வீடுகள் அட்டைப்பெட்டி மற்றும் பலகையால் அமைக்கப்பட்டுள்ளன. 2009 தொடக்கம் இங்கு குறைந்தது 16 தீ சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக கொரிய டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

Back to top button