உலகச் செய்திகள்ஆசியா

நேபாளத்தில் 30 ஆண்டுகளில் 27 பயங்கர விமான விபத்துக்கள் – காரணம் என்ன…?

நேபாளத்தில் நேற்று இடம்பெற்ற விமான விபத்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 27 பயங்கரமான விமான விபத்துகள் நடந்துள்ளன என்று தெரியவருகிறது.

வானிலை நிலவரத்தைச் சரியாகக் கணிக்காதது, போதிய பயிற்சி இல்லாத விமானிகள், விமானம் இயக்குவதை கடினமாக்கும் மலைப்பகுதிகள், விமானங்களில் புதிய முதலீடுகள் செய்யாதது, உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்புக் குறைபாடுகள் முந்தைய விமான விபத்துகளுக்குக் காரணமாக இருந்துள்ளன என்று பல தரவுகளில் கூறப்படுகிறது.

2013ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் பாதுகாப்புக் காரணங்களுக்காக நேபாள விமானங்களைத் தடை செய்தது. இதனால், ஐரோப்பிய வான் எல்லைக்குள் நேபாள விமானங்கள் நுழையவே முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் இதற்கு முன்பு நடந்த விமான விபத்துக்கள் சில..!

01..2012ஆம் ஆண்டு மே மாதம் 14 திகதி , பொக்காராவில் இருந்து ஜோம்சோம் நோக்கி சென்ற விமானம் ஜோம்சோம் அருகே விபத்துக்குள்ளானதில் 15 பேர் இறந்தனர்.

02..அதேயாண்டு செப்டம்பர் மாதம் திருபுவன் சர்வதேச விமான முனையத்தில் சீத்தா ஏர் விமானம் அவசரமாக தரை இறங்கும்போது விழுந்து நொறுங்கியதில் 19 பேர் பலியானார்கள்.

03..2016 ஆம் ஆண்டு தாரா விமான நிறுவனத்தின் விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் விபத்தில் சிக்கியதில் பணியாளர்கள் உள்பட 23 பேர் பலியானார்கள்.

04..2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா-பங்களா ஏர் விமானம் திருபுவன் சர்வதேச விமான நிலைய முனையத்தில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 51 பேரும் பலியானார்கள்.

05..2022ஆம் ஆண்டு மே மாதம் 29 திகதி முஸ்டாங் மாவட்டத்தில் தாரா விமான நிறுவன விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 இந்தியர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையிலேயே தொடரும் இந்த விபத்துக்களுக்கு போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது, விமானப் பணியாளர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்காதது ஆகியவையே நேபாளத்தில் விமான விபத்துகள் நடப்பதற்கு முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

Back to top button