உலகச் செய்திகள்ஆசியா

நேபாளம் விமான விபத்து – கறுப்பு பெட்டி மீட்பு!

நேற்று மென்தினம் இடம்பெற்ற நேபாள விமான விபத்தில் விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பொக்காரா நோக்கி சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் பொக்காரா விமான நிலையத்தை நெருங்கியபோது அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பற்றி எரிந்ததில் விமானத்தில் பயணித்த 72 பேரும் உயிரிழந்தனர்.

இதுவரை 69 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

இந்நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்புக் குழுவினர் கைப்பற்றி உள்ளனர். கைப்பற்றப்பட்ட காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் ஃபிளைட் டேட்டா ரெக்கார்டர் ஆகிய இரண்டும், சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விபத்து பற்றிய முக்கிய தடயங்கள் இந்த பெட்டிகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்புப் பெட்டிகள் என்றால் என்ன?

ஆரஞ்சு நிறத்திலான இரண்டு மெட்டல் பெட்டிகளே கருப்பு பெட்டிகள் ஆகும். இதில் ரெக்கார்டர்கள் இருக்கும். 1950ம் ஆண்டு முதல் இந்த கருப்புப்பெட்டி முறை நடைமுறையில் உள்ளது. விமான விபத்து நிகழும்போது கடைசியாக நடைபெற்ற உரையாடல்கள் உள்ளிட்டவைகள் இந்த ரெக்கார்டரில் பதிவாகி இருக்கும்.

இந்த உரையாடலின் மூலம், விமான விபத்து நிகழ்வதற்கு முன் விமானிகள் என்ன பேசிக்கொண்டார்கள், விபத்திற்கான காரணம் உள்ளிட்டவைகளை அறிய முடியும்.

கருப்புப் பெட்டிகள் சேதம் அடைவதில்லையா?

இந்த கருப்புப்பெட்டி, டைட்டானியம் உள்ளிட்ட உலோகங்களால் ஆனது. அதிக வெப்பம், குளிர் உள்ளிட்டவைகளை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து நிகழ்ந்தால், மீட்பு பணிகளோடு, கருப்புப்பெட்டியை தேடும்பணியும் முடுக்கிவிடப்படும். கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகும் பட்சத்தில் கருப்புப் பெட்டியில் இருந்து 30 நாட்களுக்கு சிக்னல்கள் வரும். என்று குறிப்பிடப்படுகிறது.

Back to top button