உலகச் செய்திகள்

வெடிக்காத நிலையில் உக்ரேனிய சிப்பாயின் நெஞ்சுக்குள் கிடந்த கிரனேட்!

உக்ரேனிய இராணுவ சிப்பாய் ஒருவரின் நெஞ்சுக்குள்ளிருந்து, வெடிக்காத நிலையில் இருந்த கிரனேட் ஒன்றை அந்நாட்டு மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

குறித்த இராணுவ சிப்பாயின் இதயத்துக்கு அருகில் இந்த கிரனேட் சிக்கியிருந்தது.

இந்த கிரனேட் எந்த வேளையிலும் வெடிக்கும் என்ற அபாயம் இருந்ததால், இரத்தம் வெளியேறுவதை மின்சாரத்தால் கட்டுப்­படுத்துவதை தவிர்த்து இச்சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக அறுவைசிகிச்சை மேற்கொண்டுள்ள உக்ரேனிய இராணுவ மருத்துவர்களின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

உக்ரேனிய பாதுகாப்புப் படைகளின் மிகுந்த அனுபவமுள்ள சத்திரசிகிச்சை நிபுணர் மேஜர் ஜெனரால் அன்ட்றே வேர்பா தலையில் இசத்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்­பட்டுள்ளது.

இராணுவப் பொறியியலாளர்கள் இருவரும் சத்திரசிகிச்சை அறையில் பாதுகாப்புக்காக இருந்தனர்.

சிப்பாயின் உடலிலிருந்து அகற்றப்பட்ட கிரனேட் ட் பின்னர் கட்டுப்பாட்டு முறையில் வெடிக்கச் செய்யப்பட்டது.

இந்த கிரனேட் எவ்வாறு மேற்படி சிப்பாயின் உடலில் புகுந்து என்பது தெரி­விக்கப்படவில்லை. எனினும், 4 சென்ரி­மீற்றர் நீளமான இந்த கிரனேட் , 400 மீற்றர் தூரத்திலிருந்தும் ஏவப்படக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button