சீனாவில் 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தில் 6 பேர் காயமடைந்ததுடன் 120 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவுக்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் உள்ள வூஷி கவுண்டியில் பூமிக்கடியில் 22 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த தகவலை சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சீனாவை தொடர்ந்து இந்திய தலைநகர் டெல்லியிலும் நள்ளிரவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக டெல்லியில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.