உடல்நலம்

மூட்டு வலி காணாமல் போக இந்த அதிசய மருந்தை செய்துபாருங்கள் போதும்!

முழங்கால்கள் வலிக்கத் தொடங்கும் வரை நாம் எந்தளவுக்கு நம் முழங்கால்களை நம்பியிருக்கிறோம் என்பதை உணராமல் நாம் அடிக்கடி நம் நாளைக் கழிக்கிறோம். உடல் வலிகளில் மிகவும் கடினமான ஒன்று முழங்கால் வலியாகும், ஏனெனில் நீங்கள் நின்று கொண்டிருந்தாலும் சரி உட்கார்ந்திருந்தாலும் சரி, உங்கள் முழங்கால்களும் அதற்கு பங்களிப்பு வழங்குகிறது.. இந்த நாள்பட்ட முழங்கால் வலி புர்சிடிஸ், கீல்வாதம் அல்லது சில சந்தர்ப்பங்களில் சில காயங்களால் ஏற்படலாம், ஆனால் அதிர்ஷ்டவசமாக வலியிலிருந்து குணமடைய உதவும் பல்வேறு வைத்தியங்கள் உள்ளன.அவற்றுள் இயறகையான ஒரு முறையினையை இஙகு காணலாம்.

தேவையான பொருள்
1-வெங்காயம்
மஞ்சள்
சுக்குப்பொடி
கடுகு எண்ணெய்
செய்முறை
வெங்காய தோலை அகற்றி விட்டு அதனை திக்க்கான பேஸ்ட் செய்யும் விதத்தில் துருவி கொள்ளுங்கள்.

சாற்றோடு கிடைக்கும் இந்த வெங்காயத்தை துருவி எடுத்துக்கொண்டு, ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டுவைத்து கொள்ளுங்கள்.

மஞ்சள் ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

சுக்குப்பொடி ½ தேக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள். இவை மூன்றினையும் நன்றாக கலந்துக்கொள்ளுங்கள்.

அடி கணமான பாத்திரமொன்றினை எடுத்து அதனுள் கடுகு எண்ணெயை 2 கரண்டி ஊற்றிக்கொள்ளுங்கள்.

அதனுள் கலந்து வைத்திருந்த அந்த கலவையினை சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கிக்கொள்ளுங்கள்.

அதன் நிறம் பொன் நிறமாகும் வரையில் சூடாக்கிககொள்ளுங்கள்.

பின் ஒரு குறிப்பிட்ட சூட்டில் இருக்கும்போது மூட்டில் தேய்த்துக்கொள்ளுங்கள்.

அதன்பின் அதனை ஒரு பொலித்தீன் ஷீட்டினால் மூடிக்கொள்ளுங்கள்.

மூட்டு வலி குறையும் வரை இந்த பேஸ்ட்டை தினமும் பயன்படுத்தலாம்.

வெங்காயத்திலுள்ள சல்பர் மூட்டு தேய்வுகளை குணப்படுத்த உதவும்.

மூட்டு இடைகளிள் சவ்வு விலகுவது அல்லது சவ்வுகள் தேய்வதனால் அதிகம் இந்த மூட்டுவலி ஏற்படுகிறது மற்றும் சுக்குப்பொடியிலுள்ள சத்துக்களானது கால்சிய குறைப்பாட்டினை சரி செய்ய கூடியது.

மற்றும் எலும்புகளை உறுதியாக்க கூடியது.

இதனை இந்த வெங்காயத்தினால் சரிப்படுத்த முடியும்.மற்றும் மஞ்சளிலுள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை இந்த மூட்டு வலியை சரியாக்க கூடிய ஒன்றாகும்.

Back to top button