சூப்பரான வாழைப்பழ அப்பம் செய்வது எப்படி?
தென்னிந்தியாவின் பாரம்பரிய பலகாரங்களில் ஒன்று வாழைப்பழம் அப்பம்.
இதன் வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உட்புறம் மென்மையாகவும் இருக்கும்.
இந்த சுவையான இனிப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப்
வெல்லம் – 1/2 கப்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
கனிந்த வாழைப்பழம் – 2
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
வெல்லத்தை பொடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து பாகு செய்து வடிக்கட்டி எடுக்க வேண்டும்.
பின் கோதுமை மாவு, அரிசி மாவு, மசித்த வாழைப்பழத்தை சேர்த்து, அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகு, உப்பு, சமையல் சோடா, ஏலக்காய் பொடி, சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக கலந்து 30 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றி, பொறித்து எடுத்தால் சுவையான வாழைப்பழ அப்பம் தயார்!