முட்டி வலியிலிருந்து விடுபட வெண்டைக்காய் தண்ணீரை இப்படி எடுங்க!
பொதுவாக வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்ட ஒரு காய்கறியாகும். அது வழவழப்பான தன்மை கொண்டதால் பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. ஆனால் இதில் பல மருத்துவநன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் வெண்டைக்காயை மருந்தாக எடுக்க வெண்டைக்காயை 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குடிக்கலாம். இந்த வெண்டைக்காயின் நன்மைகளில் ஒன்று முட்டிவலியை குறைப்பதுதான். ஏனெனில் மூட்டு வலிக்கு வெண்டைக்காய் சிறந்த நன்மைகளை அளிக்கும். இதை சமையலில் சேர்ப்பதை தாண்டி இதை எப்படி மூட்டுவலிக்கு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
எப்படி எடுத்து கொள்வது?
வெண்டைக்காயை கழுவி 3-5 எடுத்துகொள்ளவும். முனைகளை நறுக்கி நீளமாக நறுக்கவும். அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து இரவு முழுவதும் ஊறவிடவும். காலையில் ஊறவைத்த வெண்டைக்காயை எடுத்து மென்று சாப்பிட்டு அதன் நீரை குடித்து விடவும்.
நன்மைகள்?
ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த வெண்டைக்காய் நீரில் காணப்படும் குவெர்செடின் மற்றும் கேம்ப் ஃப்ரால் போன்ற பல முக்கியமான் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரம். இவை வீக்கத்தை குறைக்கலாம்.
இந்த நீர் எடை இழப்புக்கு உதவும். வெண்டைக்காய் கலவைகள் எடை இழப்பை ஊக்குவிக்கும்.
இதில் உள்ள பாலிபினால்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் உட்பட இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதில் உள்ள நொதிகள் மற்றும் புரோட்டின்களின் வெளிப்பாட்டை மாற்றியமைத்து நீரிழிவு தொடர்பான நெஃப்ரோபதியை தடுக்க உதவுகிறது.
உடலில் இரத்த சர்க்கரை அளவு மற்றும் மொத்த கொழுப்பு ஆகியவற்றையும் குறைக்க செய்யும்.