கால் வீக்கத்திற்கு உடனடி தீர்வு இதோ!
பொதுவாகவே பெண்களுக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டு வீக்கம் வரும். இதை சரிசெய்ய சிகிச்சை தொடங்கி வீட்டு வைத்தியம் வரை பல வழிகள் உள்ளன. இந்த வீக்கத்தை உடனே சரி செய்தால் உடனடி தீர்வு பெறலாம். ஆகவே என்ன செய்து இந்த பிரச்சினையில் இருந்து தீர்வு பெறலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தினமும் வெதுவெதுப்பான எண்ணெயைக் கொண்டு உங்கள் பாதங்களை மசாஜ் செய்யவும்.
வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் வரை மசாஜ் செய்யவும்.
மசாஜ் செய்ததன் பிறகு அந்த இடத்தில் மஞ்சள் தேய்த்து வர நிவாரணத்திற்கு உதவும்.
துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து வீக்கம் அடைந்த பகுதியில் உத்தடம் கொடுக்கவும்.
வெந்நீரில் கல் உப்பை சேர்த்து, அதில் பாதங்களை வைத்து வர கால்களில் உள்ள வீக்கம் குறையும்.
உடல் எடை அதிகமாக இருந்தாலும் கால் வீக்கம் அதிகரிக்கும்.
தினமும் வாக்கிங் மற்றும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதன் மூலமும் வீக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும்.
குறிப்பு: நீண்ட நாள் வீக்கமாக இருந்தால் கட்டாயம் மருத்துவரிடம் சரியான சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.