உலகச் செய்திகள்

இந்தோனிசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி உருவாகுமா?

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.0 என்கிற ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் வட மலுக்கு மாகாணத்தில் உள்ள மேற்கு டோபெலோ என்கிற பகுதியில் இருந்து 94 கி.மீ., தொலைவில் 116 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில், இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் கூறுகையில், “சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. ஆனால் சாத்தியமான பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என்றது. கடந்த ஆண்டு (2022) மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 331 பேர் உயிரிழந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 600 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button