உடல்நலம்

மழைக்காலத்தில் ஏற்படும் சைனஸ் பிரச்சனையை குணப்படுத்த இதுதான் நிரந்தர தீர்வு!

தற்போது மழைக்காலம் என்பதால் பலருக்கும் சளி, இருமல், சைனஸ் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றன. அதிலும் சைனஸ் வலி மிகவும் கொடியது பெரும்பாலும் சைனஸ் பிரச்சனைகளானது காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருந்தால் அதிகரிக்கும். அது மூக்கு பகுதிகளில் கடுமையான வலியையும், ஒருவித அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். மழைக்காலத்தில் அதிகரிக்கும் சைனஸ் பிரச்சனையில் இருந்து குணமாக சில இயற்கை வைத்தியங்களை பற்றி பார்க்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரில் முக்கியமாக உள்ள ஆன்டி- பாக்டீரியல் பண்புகள் சளி, இருமல், அழற்சி போன்ற பிரச்சனைகளிலிருந்து நிரந்தரமாக குணமடைய உதவுகின்றன.

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்தால் உடலினுள் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, சீக்கிரமாக குணமடைய உதவும்.

ஆவி பிடிப்பது
சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் சூடான நீரில் சிறிது யூகலிப்டஸ் தைலத்தை சேர்த்து ஆவி பிடிப்பதன் மூலம் சைனஸ் பிரச்சனையிலிருந்து பூரணமாக குணமடையலாம்.

இவ்வாறு ஆவி பிடிக்கும்பொழுது சுவாச பாதையில் உள்ள சளி இளகி, வீக்கம் குறைந்து சுவாச பாதை விரிவடைவதால், சைனஸ் பிரச்சனையிலிருந்து உடனடியாக நிவாரணம் பெறலாம்.

மஞ்சள்
சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சளில் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. இதில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் உள்ளன.

சைனஸால் அவதிப்படுபவர்கள் சுடுநீரில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குடித்து வந்தால், சுவாச பாதையில் உள்ள சளி இளகி வெளியேறி, சுவாச பாதை சுத்தமாகும்.

யூகலிப்டஸ் ஆயில்
யூகலிப்டஸ் ஆயில் சைனஸ் பிரச்சனைகளை எதிர்த்து போராடி சுவாச மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

யூகலிப்டஸ் ஆயிலை சில துளிகள் கைக்குட்டையில் ஊற்றி, அதை அடிக்கடி சுவாசித்தால், சுவாச பாதையில் உள்ள அடைப்புகள் நீங்கி, சுவாச பாதை சுத்தமாக இருக்கும்.

மிளகு
மிளகும், மஞ்சளைப் போல ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. மிளகை தொடர்ந்து பயன்படுத்தி வர, சைனஸ் மற்றும் சுவாச பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். விரும்பினால் அத்துடன் சிறிது தேன் சேர்த்துக் குடிக்கலாம்.

Back to top button