இலங்கை
இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு
இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகள் பெற்றுத்தரப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜப்பானில் நிர்மாணத்துறையில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானிய மொழிப்புலமை மற்றும் உரிய பரீட்சையில் சித்தியடைதல் உட்பட்ட விசேட திறன்கள் உள்ளவர்களுக்கு விசா வழங்கப்படும் என அமைச்சர்; தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டமானது இன்று முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.