உடல்நலம்

இந்த நேரத்துக்கு முதல் இரவு உணவை முடித்து விடுங்கள் – நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை

நம்மில் பெரும்பாலோருக்கு இரவு உணவு என்பது எப்பொழுதும் தாமதமாகும் ஒரு விடயமாகும். உடல் எடையை நிர்வகிப்பதற்கும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் இரவில் சீக்கிரமாக உணவை எடுத்துக்கொள்வது சிறந்தது. எனினும் ஏன் இதை சொல்கிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஆகவே இதற்கான காரணங்களை விரிவாக பார்க்கலாம்.

சிக்கலற்ற செரிமானம் இரவு ஏழு மணிக்குள் உணவை முடிப்பதன் மூலம் தூங்குவதற்கு முன்பு ஒரு சில மணி நேரத்தை செரிமானத்திற்கு வழக்கலாம். இதுவே தாமதமதாக எடுத்துக்கொண்டால் செரிமானம் ஆகாமல் போக வாய்ப்புண்டு. செரிமானம் ஆகாமல் இருந்தால் உடலில் கொழுப்பு அதிகரித்து எடை அதிகரித்து விடும்.

எடை மேலாண்மை உடல் எடையை சரியான முறையில் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவராக இருந்தால், கட்டாயம் தாமதமாக சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளவும்.

சிறந்த தூக்கம் தினசரி உடலிற்கு ஓய்வெடுப்பதற்கு குறிப்பட்டளவு ஓர் நேரம் தேவைப்படும். தாமதமாகச் சாப்பிடும் போது உணவு ஜீரணத்திற்கு உடல் அதிக கவனம் செலுத்தும். ஆகவே உடல் ஓய்வெடுப்பதில் தாமதமாகும். எனவே முடிந்தளவு சீக்கிரமாக இரவு உணவை முடித்துக்கொள்ளவும்.

ஹார்மோன் சமநிலை தாமதமாக சாப்பிடுவதால் உடலில் ஹார்மோன் சமநிலையை சீர்குலையும். தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோன் பாதிக்கப்படும். அவ்வாறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவுக் கட்டுப்பாடு கார்போஹைட்ரேட்டுகள் உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஆகவே தாமதமாகச் சாப்பிடுவதை விட ஆறு அல்லது ஏழு மணிக்குள் சாப்பிடுவதை வழக்கப்படுத்தவும். இரவு 7 மணிக்குள் இரவு உணவை முடிக்க முயற்சி செய்வது உங்கள் செரிமானம், தூக்கம், எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் உணவுப் பழக்கத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், உங்களுக்கு ஏற்கனவே உள்ள மருத்துவப் பிரச்சினைகளை வைத்து வைத்தியரிடம் முன்கூட்டிய ஒரு ஆலோசனையை பெற்றுக்கொள்ளவும்.

Back to top button