இலங்கை

நாட்டில் இ – மின் கட்டண சேவை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இ – மின் கட்டண குறுஞ்செய்தி சேவை கிடைக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ளது. இ – மின் கட்டண சேவைக்கு பதிவு செய்யுமாறு மின் பாவனையாளர்களிடம் இலங்கை மின்சார சபை முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தது. மேலும், அச்சிடப்பட்ட கட்டணப் பட்டியல்களை முற்றிலுமாக நிறுத்துவதே இச்சேவையின் முதன்மையான நோக்கமாகும் என இலங்கை மின்சார சபை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button