இலங்கை ஸ்டைலில் சூப்பரான பால் டொபி ரெடி
இலங்கையில் எளிதில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில் பால் டொபியும் ஒன்றாகும். இதை தயாரிப்பதற்கு பொதுவாக குறைந்தளவிலான பொருட்கள் மாத்திரமே தேவைப்படும். இதை எப்படி இலகுவான முறையில் வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1 Condensed Milk
300 கிராம் சர்க்கரை
1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
50 மில்லி பால்
2 ஏலக்காய், பொடியாக நறுக்கியது
50 கிராம் முந்திரி
50 கிராம் உப்பு சேர்க்காத வெண்ணெய்
செய்முறை
முதலில் முந்திரிகளை வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி, அதில் சர்க்கரை சேர்த்து கரையும் கலந்துக்கொள்ளவும்
மிக்ஸியில் வெண்ணெய் சேர்த்து அரைத்து அதில் ஏலக்காய் சேர்த்து கிளறி எடுத்துக்கொள்ளவும்.
கொதித்து கொண்டிருக்கும் பாலில் Condensed Milk சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.
அடுத்து அடுப்பில் இருந்து இறக்கி வறுத்தெடுத்த முந்திரி சேர்த்த கலந்துக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி, அந்த கலவையை ஊற்றவும். பின் ஆறியது சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கலாம்.