இலங்கை

நாட்டு மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி: பேருந்து கட்டண உயர்வு

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.ஜனவரி மாதம் முதல் வற் வரி அதிகரிக்கப்படவுள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல் ஒரு சாதாரண பேருந்துக்கு சுமார் ஒரு கோடியே ஐம்பத்தேழு இலட்சம் என்று குறிப்பிட்ட அவர், அந்த விலைக்கு பேருந்தினை வாங்கி சாதாரண மக்களை ஏற்றிச் செல்ல முடியாது  எனவும் கூறியுள்ளார்.

இது தவிர, VAT திருத்தத்தின் மூலம் பேருந்து உதிரி பாகங்களின் விலை, எண்ணெய் விலை, எரிபொருள் விலை, சேவைக் கட்டணங்கள் அனைத்தும் உயரும் எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button