ஆன்மிகம்

சூரியன் செவ்வாய் சேர்க்கையால் அதிர்ஷடம் பெறவுள்ள இராசிக்காரர்கள்

தற்போது தனுசு இராசியில் நவக்கிரகங்களின் தலைவனான சூரியன் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் எதிர்வரும் (27.12.2023) ஆம் திகதி தனுசு இராசிக்குள் நுழைகிறார்.

இதனால் தனுசு ராசியில் செவ்வாய் சூரியன் சேர்க்கை நிகழ்கிறது.

இந்த சேர்க்கையானது இந்த ராசியில் ஒரு வருடத்திற்கு பின் நிகழ்கிறது.

இந்த சூரியன் செவ்வாய் சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையானது அற்புதமான பலன்களை வாரி வழங்கப் போகிறது.

இப்போது ஒரு வருடத்திற்கு பின் தனுசு ராசியில் நிகழும் செவ்வாய் சூரியன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் இராசிக்காரர்கள் இவர்கள்தான்.

தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது.

இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

இந்த தைரியம் மற்றும் தன்னம்பிக்கையால் உங்கள் வாழ்க்கையில் சில சாதனைகளைப் புரிவீர்கள். எடுக்கும் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தைரியமாக ரிஸ்க்குகளை எடுத்து, அதில் வெற்றி பெறுவீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது.

இதனால் இந்த ராசிக்கார்களின் தைரியம் அதிகரிக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகளில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வரும்.

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.

வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது.

இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவையற்ற செலவுகள் இக்காலத்தில் கட்டுப்படும்.

வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிலர் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.

Back to top button