உடல்நலம்

சர்க்கரைவள்ளி கிழங்கில் நன்மைகள் இவ்வளவு இருக்கா? இனிமேல் தவிர்க்காதீர்கள்

குளிர்காலத்தில் நமது உடல் வெப்பத்தையும், கதகதப்பூட்டும் உணவுகளையும் தேடும். அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளையும் நாம் தவிர்த்து விடக் கூடாது. குளிர்காலத்தில் எளிதில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு மிகச் சிறந்த ஆரோக்கிய உணவாகும். குளிர்காலத்தில் உடலின் வெப்ப நிலை குறைந்து உடல் செயல்பாடுகளை பாதிக்கும் அபாயம் உள்ளது. குளிர்காலத்துக்கு உகந்த உணவுகளில் சர்க்கரைவள்ளி கிழங்கு மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது. மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை பூர்விகமாக கொண்ட இந்த கிழங்கு வகை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பயிர் செய்யப்பட்டு வருகிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கின் நன்மைகள்
1.ஊட்டச்சத்து: சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு இயற்கை உணவான இந்த கிழங்கில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி,பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தானது நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிப்பது, சருமத்தை பராமரிப்பது, இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவது போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

  1. செரிமானம்: இந்த கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது குடலை சீராக வைத்திருக்க, உணவை நன்கு செரிமானிக்க, மலச்சிக்கலை தடுக்க என்று இதுபோன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது.
  2. Cholestrol: கிழங்கு வகை உணவில் பொதுவாகவே கொழுப்பானது சிறிதளவாது இருக்கக்கூடும்.ஆனால் இந்த கிழங்கில் கொழுப்பு என்பதே இல்லை என்கிறார்கள். இதனை உட்கொள்வதனால் cholestrol பிரச்சனை இருப்பவர்கள் தீர்வடைய இயலும்.
  3. இரத்த சர்க்கரை அளவு: இந்த கிழங்கில் இயற்கையான இனிப்பானது இருந்தாலும் இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகின்றது.
  4. கருவுறுதல்: சத்துக்குறைபாடால் கருவுறுதலில் தாமதம் ஏற்படக்கூடிய பெண்கள் இதனை உட்கொள்ளலாம். இக்கிழங்கில் இருக்கக்கூடிய Folate ஆனது பெண்களை விரைவில் கரு உருவாவதை உறுதி செய்யும்.
  5. இதயம்: இந்த சர்க்கரைவள்ளி கிழங்கில் பொட்டாசியம் நிறைந்துள்ளமையால் இரத்த அழுத்தத்தைச் சீராக்குவதன் மூலம் இதய நோய் ஏற்படாமல் தடுக்க வழிவகுக்கிறது.
  6. Ulcer: உணவை செரிக்கும் உறுப்புகளான வயிறு மற்றும் குடல்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம்.அதிகம் காரம் உள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்பவர்களுக்கு ulcer பிரச்சனையானது வரக்கூடும்.சர்க்கரைவள்ளிக் கிழங்கை தினமும் எடுத்துவந்தால் இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்க முடியும்

Back to top button