இலங்கை

வடக்கு நோக்கி நகர்ந்துள்ள இரண்டு காற்று சுழற்சிகள்: மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள இரு காற்று சுழற்சிகள் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சியும், வட அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சியுமாக நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் வெவ்வேறான காற்று சுழற்சிகள் உருவாகியுள்ளன. இந்த இரு காற்று சுழற்சிகளும் தற்போது ஒன்றாக இணைந்து சற்று வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இதனால் இன்றைய வானிலையின் படி, (26) அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் நாளை (27) முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இது சில நாட்களுக்கு தொடரும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது இடையிடையே ஓரளவு மழை பொழியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button