இலங்கை
வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் : வெளியான காரணம்
வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நோயாளிக்கு கோவிட் தொற்று ஏற்படவில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் அவரின் உடல் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் நிமோனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.